Saturday, April 6, 2013

எச்சரிக்கை! ஸ்கைப்பில் பரவும் மால்வேர்


ஸ்கைப் (Skype) பற்றி அதிகமானவர்கள்  வெளிநாடுகளில் உள்ளவர்களால் அதிகம் பயன்படுத்தும் ஸ்கைப்பில் அடிக்கடி மால்வேர் பரவும். தற்போதும் புதுவகையான மால்வேர் பரவிவருகிறது.

இந்த மால்வேர் பற்றி பார்ப்பதற்கு முன், Bitcoin பற்றி தெரிந்துக் கொள்வோம்.

Bitcoin என்றால் என்ன?


Bitcoin என்பது Virtual நாணயம் ஆகும். இது 2009-ஆம் ஆண்டு Satoshi Nakamoto என்ற தனி நபரால் அல்லது ஒரு குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது திறந்த மூலம் (Open Source) ஆகும். இந்த நாணயங்கள் கணினி-மொபைல்கள் மூலம் பரிமாறப்படுகிறது. இதற்கென்று எந்த ஒழுங்குமுறைகளும் கிடையாது.

கடந்த ஜனவரி மாதம் 13.50 அமெரிக்க டாலராக இருந்த ஒரு BitCoin மதிப்பு தற்போது 140 டாலராக உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் BitCoin நாணயத்தை அங்கீகரித்துள்ளன. இந்த நாணயங்கள் மூலம் நீங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம்.

பிட்காயின்களைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று விலைக் கொடுத்து வாங்கலாம், இரண்டாவது Bitcoin Miner மென்பொருள்கள் மூலம் நீங்களே உருவாக்கலாம்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபற்றி விரிவாக என்னால் சொல்ல இயலாது.

ஸ்கைப் மால்வேர்:

பொதுவாக மால்வேர் பரப்புபவர்கள் வித்தியாசமான செய்திகளுடன் சுட்டியை இணைத்து அனுப்புவார்கள்.

  •  Hey some person is making terrible rumors about you... tinyurl.com/83zexxf 
  • This video with you in it had me dying lol  t.co/xxxxx
  • when did you make this video? its hilarious, cant stop laughing lol bit.ly/xxxx
தற்போது ஸ்கைப்பிலும் இப்படி தான் மால்வேர் சுட்டிகளை அனுப்புகிறார்கள். இதை நம்பி அந்த சுட்டிகளை க்ளிக் செய்தால் உங்களுக்கு தெரியாமலேயே Bitcoin Miner மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிடும். இந்த அப்ளிகேசன் உங்கள் கணினி மூலம் பிட்காயின்களை மால்வேரை அனுப்பியவருக்கு உருவாக்கி அனுப்பும்.

இந்த மென்பொருள் இயங்குவதால் உங்கள் கணினி வேகம் குறைந்துவிடும், சில சமயம் உங்கள் கணினி இயங்காமலேயே போக வாய்ப்புண்டு.

இந்த மால்வேர் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள:Skypemageddon by bitcoining

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்....! எந்தவொரு வித்தியாசமான சுட்டியையும் க்ளிக் செய்வதற்கு முன் பல தடவை யோசித்து செயல்படுங்கள்
Read more »

Thursday, April 4, 2013

உங்கள் Hard Disk இன் நிலையை அறிய

கணினியில் இயங்குதளத்தினை அடிக்கடி நிறுவும் போது Hard disk இன் ஆயுள் காலம் குறைந்து விடும். மேலும் தேவையில்லாமல் கணினியில் அப்ளிகேஷன்களை கணினியில் நிறுவி பின் நீக்கும் போது Hard disk இக்கு பிரச்சினை ஏற்படக்கூடும். 
Hard disk ஐ முறையாக பராமரிக்காமல் இருந்தால் ஆயுள்காலம் கண்டிப்பாக குறைந்துவிடும்.  சில நேரங்களில் கணினியில் ஒன்றுக்கு மேலான அப்ளிகேஷன்களில் பனியாற்றிக்கொண்டிருக்கும் போது தீடிரென கரன்ட் இல்லாமல் கட் ஆகிவிடும். அப்போது கணினியில் நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். மேலும் Hard disk ஆனது சில நேரங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஊதா நிற விண்டோ தோன்றி வன்தட்டானது சரியாக இல்லை அதை மாற்றம் செய்ய சொல்லும். 
இதுபோன்ற பிரச்சைகள் வரும் முன்னரே நம் கணினியில் Hard disk இல் என்ன நிலையில் உள்ளது என்பதை நம்முடைய இயங்குதளத்தின் உதவியுடன் அறிந்துகொள்ள முடியும்.

இதற்கு முதலில் வின்கீ+R கீகளை ஒருசேர அழுத்தவும். அப்போது Run சாளரப்பெட்டி திறக்கும். அதில் cmd என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அடுத்து commend prompt  ஒப்பன் ஆகும் அதில் wmic என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.

அடுத்து diskdrive get status என்று தட்டச்சு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.


உங்கள் Hard disk நன்றாக இருந்தால் OK என்ற செய்தி வரும். மிகவும் நன்றாக இருப்பின் OK OK என்று வரும். அதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். கணினியினுடைய Hard disk நிலையை
Read more »

Thursday, March 7, 2013

விண்டோஸ் 8 மற்றும் 7 USB பூட்டபிள் பெண்ட்ரைவினை உருவாக்க




கணினியில் இயங்குதளத்தை நிறுவ பல்வேறு வழிகள் இருக்கின்றன, அவற்றில் பெரும்பான்மையாக பயன்படுத்தபடுவது  CD/DVD , USB , ETHERNET,  மூலமாக நிறுவுவதே ஆகும். இவற்றில் நாம் தற்போது அதிகம் பயன்படுத்துவது CD/DVD என்றாலும் கூட, அவற்றை மிஞ்சும் வகையில் தற்போது USB மூலம் இயங்குதளத்தை நிறுவுதல் என்பது அதிகமாகி வருகிறது. USB மூலம் நிறுவ வேண்டுமெனில் நாம் நம்முடைய USBயினை பூட்டபிள் USB யாக மாற்ற வேண்டும். இதற்கு இரண்டு வழி உள்ளது ஒன்று ISO பைலாக உள்ள இயங்குதளத்தை நாம் பூட்டபிள் பைலாக USB யில் மாற்ற வேண்டும். இல்லையெனில் ஏற்கனவே பூட்டபிள் பைலாக சீடியில் உள்ள இயங்குதளத்தை பெண்ட்ரைவிற்கு காப்பி செய்ய வேண்டும். நாம் சாதாரணமாக காப்பி செய்தால் இயங்குதளத்தை நிறுவ முயற்ச்சிக்கும் போது கோளாறு செய்தி ஏற்படும்  இதனை சரி செய்ய ஒருவழி உள்ளது சாதாரணமாக காப்பி செய்வதற்கு பதிலாக  Unified Extensible Firmware Interface (UEFI) என்னும் முறைமையை பயன்படுத்தி OS ஐ  பெண்ட்ரைவிற்கு காப்பி செய்வதன் மூலம் நம்மால் எளிமையாக USB மூலம் இயங்குதளத்தை கணினியில் எளிமையாக Install பண்ண  முடியும்.

ok இப்போது  Unified Extensible Firmware Interface (UEFI) முறைமையை பயன்படுத்துவது என்று பார்ப்போம். முதலில் Command Prompt யை ஒப்பன் செய்யவும். இதற்கு Windows key + R key ஐ  ஒரு சேர அழுத்தி தோன்று window இல்  cmd என்று உள்ளிட்டு Ok செய்யவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் diskpart என type செய்து  என்டர் கீயை அழுத்தவும். அப்போது தோன்றும் செய்தியை  படித்துவிட்டு Yes என்று உள்ளிடவும். 

  • பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் list disk என்று type செய்து என்டர் கீயை அழுத்தவும். அப்போது உங்கள் கணினியில் உள்ள Hard disk  மற்றும் பெண்ட்ரைவ் வரிசைப்படுத்தபடும். 
  • பிறகு நீங்கள் காப்பி செய்ய வேண்டிய Disk எண்னினை குறித்து வைத்துக்கொள்ளவும்.  என்னுடைய கணினியில் பெண்ட்ரைவானது, Disk 1. என உள்ளது.
  • பின்பு select disk 1 என்று type செய்து என்டர் கீயை அழுத்தவும்.  அடுத்ததாக பின் வரும் command  ஐ வரிசையாக உள்ளிடவும்.

  • clean

  • create partition primary

  • format fs=fat32 quick label=TC

  • active

  • assign

  • list volume

  • exit

     

    மேலே குறிப்பிட்ட command ஒன்றன் பின் ஒன்றாக Type செய்யவும் . இதில் format fs=fat32 quick label=TC என்ற command இல்  TC - க்கு பதில் உங்கள் விருப்ப பெயரை பெண்ட்ரைவிற்கு இட்டு கொள்ள முடியும்.

     


 இனி நீங்கள் செய்ய வேண்டியது வழக்கம் போல சீடி மற்றும் டிவிடியில் உள்ள இயங்குதளத்தை பெண்ட்ரைவிற்கு காப்பி செய்தால் போதும்
copy செய்து முடித்தவுடன். நீங்கள் பெண்ட்ரைவினை இயங்குதளம் நிறுவுதலுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இதே முறையயை பின்பற்றி ISO பைலை கன்வெர்ட் செய்து Usb யில் ஏற்றிக்கொள்ள முடியும். இதற்கு 7zip உதவுகிறது.
ISO பைல்களை கொண்டு பூட்டபிள் விண்டோஸ்7 மற்றும் 8  ப்ளாஷ்ட்ரைவினை உருவாக்குவற்கான இதோ link http://www.microsoftstore.com/store?Action=html&Locale=en_US&SiteID=msstore&pbPage=Help_Win7_usbdvd_dwnTool
Read more »

Saturday, January 19, 2013

இலங்கை அரசை அச்சுறுத்தும் Anonymous Hackers…...


 
 
இலங்கை அரசிற்கு தற்போது தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ள ஒரு பிரச்சனையாக இந்த ஹக்கேர்ஸ்களின் தாக்குதல்கள் நடந்தேறியிருக்கின்றன. பொதுவாக ஏனைய பல உலக நாடுகளும் இத்தகைய தாக்குதல்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில் அண்மையில் நடந்த அடுத்தடுத்த இரு தாக்குதல்களால் சற்றே தடுமாறிப்போயுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் இத்தகைய ஹக்கேர்ஸ்களின் தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் அதாவது யுத்த நிலைமைகள் தீவிரம் அடைந்த காலப்பகுதியில் இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான இணையத்தளங்கள் மீதும்(Defence.lk, Navy.lk, Army.lk)   இலங்கையின் தொலைபேசி சேவை வழங்குநர்களின்(Dialog, Mobitel, Suntel, Sri lanka Telecom)  சேர்வர்கள்(server) மீதும்  உலகளவில் இயங்கும் அனோனிமஸ்(Anonymous) குழுமங்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் பலவகையான தகவல்களும் கையகப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு நின்றுவிடாமல் குறிப்பிட்ட அந்த தளங்களில் பயனாளர்களாக இருந்தோரின் அந்தரங்க தகவல்கள் பலவும் பகிரங்கப்படுத்தப்பட்டன. மேலும் 2009 ஆம் ஆண்டு மே மாதமளவில் இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின்(Katunayake International Airport) கணினி வலையமைப்பு(Computer Network) இனந்தெரியாத ஹக்கேர்ஸ் குழுமம் ஒன்றினால் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக முடக்கி வைக்கப்பட்டமையும் இதையொத்த செயற்பாடுகளில் ஒன்றே.
இப்படியாக இலங்கை அரச மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் இணையத்தளங்களை தாக்கும் செயற்பாடுகளின் ஒரங்கமாக அண்மையில் அதாவது ஒரு சில வாரங்களிற்கு முன்பு இலங்கை அரசின் மாகாண அமைச்சுகளிற்கு சொந்தமான சுமார் 20இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் பங்களாதேஸைச் சேர்ந்த ஹக்கேர்ஸ் குழுமம் ஒன்றினால் ஹக் செய்யப்பட்ட செயற்பாட்டை காணமுடிந்தது.
வெளியில் தங்களை பெரிதாக அறிமுகப்படுத்தாத அந்த பங்களாதேஸ் ஹக்கேர்ஸ் குழுமம், இலங்கை அரசு தனக்கு சொந்தமான இணையத்தளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து கொடுத்த அதிகப்படியான வியாக்கியானத்தை பொய்பிப்பதற்கே தாங்கள் அந்த இணையத்தளங்களை ஹக் பண்ணியதாக பின்னர் அறிவித்தது.
அந்த வரிசையில் தற்பொழுது ”இலங்கை தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தின் (The Media Centre for National Security)” உத்தியோக பூர்வமான இணையத்தளமான nationalsecurity.lk தளம் முற்றாக தாக்கியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் ”Game Over” என்ற அனோனிமஸ் ஹக்கேர்ஸ் குழுமம் ஒன்றினால் நடாத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலுக்கான Submission Date - 2013-01-16, Attack Date - 2013-01-10 என அந்த அனோனிமஸ் குழுமம் முதலிலேயே திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இடையிலும் ஒருதடவை தங்கள் Twitter பக்கத்தில் (https://twitter.com/ThisIsGame0ver) ஒரு இதுவாக இருக்கட்டுமென்றெண்ணி இந்த தாக்குதல் பற்றி அறிவித்திருந்தார்கள்.
ஆனால் ஓராயிரம் பிளஸ் பின்தொடர்பாளர்களை மட்டுமே கொண்ட இவர்களுடைய பக்கத்தில் இதனை எவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் சத்தம் போடாமல் இவர்கள் செய்த தாக்குதலின் வீரியம் இறுதிநேரத்தில் தான் இலங்கை அதிகாரிகளிகு தெரிய வந்திருக்கிறது. என்செய்ய அந்த நேரம் நிலைமை கைமீறிப்போய்விட்டிருந்தது.
பொதுவாக இணையத்தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஹக்கேர்ஸ் SQLi  Attack, Brute force Attack, XSS  Attack…… என பலவகையான தாக்குதல் வழிமுறைகளை கையாளுகிறார்கள். ஆக குறிபிட்ட இந்த nationalsecurity.lk இணையத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர்கள் SQL injection  தாக்குதல் வழிமுறையை பயன்படுத்திருக்கிறார்கள் என தெரிய தற்போது வந்துள்ளது.
குறிப்பாக ஒரு இணையத்தளம்  PHP இல் MYSQL databaseஇனைக் கொண்டே இயங்குகின்றதென தெரிய வரும் போது அத்தகைய இணையத்தளங்கள் மீது இத்தகைய SQL Injection தாக்குதல் முறை சாத்தியமாகிறது.  இப்படியாக வெற்றிகரமாக nationalsecurity.lk தளம் மீது தாக்குதல் நடத்திய ஹக்கேர்ஸ் அந்த இணையத்தளத்தின் பயனாளர்களின் பயனர் பெயர்கள்(user name) plain-text வடிவத்திலான கடவுச்சொற்கள்(password) போன்றவற்றையும் கையகப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள் அந்த விபரங்களை இந்த சுட்டியில் சென்று பாருங்கள்.  http://218.62.32.76/releases/nationalsecurity.txt
இந்த இணையத்தளம் நேரடியாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளரின் மேற்பார்வையின் கீழ் இயங்கிய ஒன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு பெரிய இழப்பு ஏனெனில் இதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேசிய பாதுகாப்பு ரகசியங்கள் பலவும் ஹக்கேர்ஸ்ஸால் களவாடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக ”Game Over” ஹக்கேர்ஸ் குழுமத்தினால் முற்றாக தாக்கியளிக்கப்பட்ட இந்த இணையத்தளம்  தற்சமயம்         ”We are currently performing site maintenance. we’ll be back 100% in a bit.”  என்ற மாதிரியான அறிவிப்பை தெரிவித்தபடி உள்ளது..
Read more »

Sunday, December 9, 2012

Do Not Track Me ! உங்கள் தகவல்களை இணையத்தில் மறையுங்கள்

DNT1Windows 8 வரவுக்கு சில காலம் முதல் Do Not Track Me என்ற சொல்லாடல் இணையத்தில் அதிகளவு அடிபட்டது. ஆனால் இன்று சற்று குறைந்து விட்டது. இந்த பதிவின் மூலம் Do Not Track Me என்றால் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது? இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு எவ்வாறு இணையத்தில் உறுதி படுத்த படுகிறது? இதன் எதிர் காலம் என்ன? என்பவை தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம்.



 Do Not Track Me

இதை பற்றி பார்க்க முதல் ஒரு உதாரணம். நீங்கள் Google இல் வாசனை திரவியங்கள் பற்றி தேடுகிறீர்கள்.அதன் போது  உங்களுக்கு வாசனை திரவியங்கள் பற்றிய விளம்பரங்கள் தேடல் முடிவுகளுடன் இணைத்து தோன்றும். தேடும் போது வருவது ஏற்று கொண்டாலும், நீங்கள் வேறு ஒரு இணைய பக்கத்தை பார்க்கும் போதும் அங்குள்ள Adsense மூலம் வாசனை திரவியம் வாங்கவில்லையா போன்ற விளம்பரங்கள் வருவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

சில தினங்களுக்கு முதல் தேடியதை இப்போது எப்படி இங்கு ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள் என்று ஜோசிக்கலாம். அல்லது என்னில் இவ்வளவு அக்கறையாக Google  போகும் இடமெல்லாம் கடை போட்டு விற்கிறார்கள் என்று பெருமைப்படலாம்.

 இப்போதெல்லாம் கூகிள் Algorithms மிக துல்லியமாக செயற்பட்டு நீங்கள் வாசனை திரவியம் வாங்க போகிறீர்களா? இல்லை விற்க போகிறீர்களா என்று பார்த்து பொருத்தமான விளம்பரத்தை காட்டும்  அளவுக்கு மேம்படுத்த பட்டுள்ளது. அதை விட நீங்கள் வாசனை திரவியம் தொடர்பான தீமைகள் பற்றி தேடினாலும்  Algorithm துல்லியமாக கண்டு பிடித்து இதை பற்றியே ஒன்றும் தெரியாதது போல  அல்லது புற்றுநோய் பற்றிய விளம்பரத்தை காட்டி எமக்கு நல்ல பிள்ளையாக இருக்கும்.

இதை விட IP யை பதிவு செய்தல்,  Google Analytics, Woopra போன்ற  கண்காணிக்கும் சேவைகள் மூலம் நீங்கள் எங்கிருந்து வந்து எதை செய்கிறீர்கள் என்று அறியும் முறைகள கூட ஆபத்தானவை. வரும் காலத்தில் உங்களுக்கு என்று தனியான IP கிடைக்கும். அதன் பின்னர் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை மிக துல்லியமாக கண்காணிக்க முடியும்.

Do Not Track Me ! என்றால் என்ன?


நீங்கள் தேடும் முடிவுகள், உங்கள் இணைய நடத்தைகளை இரெண்டாம் தரப்பு கண்காணிப்பதை தடுக்கும் முறை.இது தொடர்பாக wikipedia இல் காணுங்கள்.

Do Not Track Me யாரெல்லாம் பயன்படுத்தலாம்?


இணையத்தை பாவிக்கும் தனிபட்ட தகவல்களை  பாதுக்காக விரும்பும் ஒவ்வொரு சுதந்திர இணைய பாவனையாளரும் நிச்சயம் பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்துவதால் எந்த  தீமையும் இல்லை.


Do Not Track Me  எப்படி பயன்படுத்துவது?


இது இப்போது ஒவ்வொரு இணைய உலாவியிலும் பல விதமாக  வருகிறது. இதை setting செய்து முடிப்பது கொஞ்சம் கடினமானது.

  • Internet Explorer இல் setting பகுதியில்  மிக இலகுவாக செய்யலாம். மேலே படங்களை பாருங்கள். என்றாலும் இதற்கும் மென்பொருள் உள்ளது .
  • Chrome, Firefox  இவற்றில் Settings  பகுதியில் இவை கிடைத்தாலும் அவ்வளவாக இயங்குவது இல்லை. இவற்றை இலகுவாக இலவசமாகவே Extensions மூலம் Do not track me வசதியை பெறலாம்.
  1. Chrome Users இங்கே தரவிறக்குங்கள் : google.com/webstore
  2. Firefox Users இங்கே தரவிறக்குங்கள் : Add ons page
  3. Internet Explorer users:  Software

இதன் நன்மைகள் என்ன? 

Video பார்த்த போது விளங்கி இருக்கும். இணையத்தில் உள்ள 600 க்கும் அதிகமான விளம்பர சேவைகள், tracking சேவைகள், Analytics சேவைகள் போன்றவற்றிடம் இருந்து உங்கள் தனிப்பட்ட விடயங்ககளை பாதுகாத்தல். உங்கள் இணைய சுதந்திரத்தை முடியுமான அளவு பாதுகாத்தல் 

இதன் எதிர் காலம் என்ன?

இதை பயன்படுத்துவது விளம்பர நிறுவங்கள், பாதுகாப்பு பிரிவுகளுக்கு பலத்த பிரச்சனையை கொடுக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் Microsoft முதல் Google வரை இணங்க வில்லை.
Read more »

Thursday, November 8, 2012

Mail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?



நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களிடம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படி Gmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்று பார்ப்போம். 

இதன் மற்ற பலன்கள் : 

உங்களுக்கு வரும் மெயில்களை கையாள பயன்படுகிறது. தேவை இல்லாத மெயில்களை தானாகவே Delete ஆகும் படி வைக்கலாம், குறிப்பிட்ட நபர் அனுப்பும் மெயில்களை குறிப்பிட்ட Label-க்கு Move செய்யலாம், குறிப்பிட்ட மெயில்களை மட்டும் வேறு Address-க்கு Forward செய்யலாம். இன்னும் பல.

எப்படி Gmail Filter- ஒன்றை உருவாக்குவது ?


குறிப்பிட்ட மின்னஞ்சலை ஓபன் செய்யுங்கள். இப்போது மின்னஞ்சலுக்கு மேலே உள்ள "More" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் "Filter Messages Like These" என்பதை கிளிக் செய்யுங்கள்.



இப்போது Search Box-இல் Filter Window ஓபன் ஆகும். அதில் From என்பதில் அனுப்பியவர் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அதே போல அவர் அனுப்பிய மெயில்கள் இப்போது பின்னால் இருக்கும்.


இதை நிரப்புவதன் மூலம் நாம் மெயில்களை கையாளலாம்.

From - அனுப்புபவர் மின்னஞ்சல் முகவரி
To - யாருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். [அடிக்கடி ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு அனுப்பி இருந்தால் இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.]
Subject - Subject எந்த மாதிரி இருந்தால் Filter செய்ய வேண்டும் என்று தெரிவிக்க
Has the words - இதில் ஒரு வார்த்தை கொடுத்து Filter செய்தால் அந்த வார்த்தை உள்ள மின்னஞ்சல் மட்டும் Filter ஆகும்.
Doesn't have - மேலே உள்ளதற்கு எதிர்மறை இது. குறிப்பிட்ட வார்த்தை இல்லை என்றால் Filter ஆகும்.
Has Attachment - மேலே தகவல்களை நிரப்பிய பின் அந்த மின்னஞ்சல்களில் Attachement எதுவும் இருந்தால் அவற்றை மட்டும் Filter செய்ய இதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது Search Button மீது கிளிக் செய்து எல்லாம் சரியாக உள்ளதா என்று வடிகட்டப்பட்ட மின்னஞ்சல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மீண்டும் More பட்டன் மீது கிளிக் செய்தால் "Create Filter" என்ற வசதி இருக்கும்.

இப்போது "Create filter with this search"  என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது அந்த மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.



Skip The Inbox (Archive it) - இதை கிளிக் செய்தால் நேரடியாக Archive பகுதிக்கு சென்று விடும்.
Mark as read  - மெயில் வந்த உடனே தானாகவே ஓபன் Read ஆகிக் கொள்ளும்.
Star it - குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலுக்கு Star கொடுத்து விடும்.
Apply The Label - குறிப்பிட்ட Label-இல் Add செய்யலாம்.
Forward it to - ஏற்கனவே Fowarding செய்து இருந்தால் அதை தெரிவு செய்யலாம். இல்லை என்றால் புதிதாக Forward செய்யலாம்.
Delete it - தானாக டெலீட் செய்யலாம்.
Never send it to Spam - அந்த மெயில்கள் எப்போதும் Inbox-க்கு வரும்.
Always mark it as important - முக்கியமான மின்னஞ்சல் என்று குறித்துக் கொள்ளும்.
Never mark it as important - முக்கியானது அல்ல என்று எடுத்துக் கொள்ளும்.
தேவையானதை கிளிக் செய்து Create Filter என்று கொடுத்து விடுங்கள்.

அவ்வளவு தான் இனி தானாவே நீங்கள் கொடுத்த செயல் நடந்து கொண்டிருக்கும்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட் naleefbcas123@gmail.com or 

https://www.facebook.com/abdulsalamnaleef
Read more »

Wednesday, October 10, 2012

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்



விண்டோஸ் 8 சிஸ்டம் வர்த்தக ரீதியாக மக்களுக்கு வெளியிடப்பட இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு, இணையத்தில் கிடைக்கும் வகையில் தரப்படுகின்றன. 

இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிக்கும் பல டெவலப்பர்கள், மிக வேகமாக இவற்றை வடிவமைத்து வழங்கி வருகின்றனர். 

குறிப்பாக விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களிலும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், இத்தகைய புரோகிராம்கள் அதிகம் தேவைப்படும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. 

செப்டம்பர் 21 அன்று, இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை, 2,000 ஐக் கடந்து 2,079 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. 

இவற்றில் 83% புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. செப்டம்பர் 9ல் கிடைத்த புரோகிராம்களில் 89% புரோகிராம்கள் இலவச புரோகிராம்களாக இருந்தன.

இவ்வாறு அதிகப்படியான எண்ணிக்கையில் அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைப்பதற்குக் காரணம், விண்டோஸ் 8 தொகுப்பு, நுகர்வோர் பயன்படுத்தும் வகையில் இலவசமாகத் தரப்பட்ட போது பல லட்சம் பேர் அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பதே. 

இப்போதும் நாளொன்றுக்கு இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் தினந்தோறும் சராசரியாக 100 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. 

எனவே, விண்டோஸ் 8 வெளியாகும் போது, இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் எண்ணிக்கை 5,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Read more »