கணினியில் இயங்குதளத்தினை அடிக்கடி நிறுவும் போது Hard disk இன் ஆயுள் காலம்
குறைந்து விடும். மேலும் தேவையில்லாமல் கணினியில் அப்ளிகேஷன்களை கணினியில்
நிறுவி பின் நீக்கும் போது Hard disk இக்கு பிரச்சினை ஏற்படக்கூடும்.
Hard disk ஐ முறையாக பராமரிக்காமல் இருந்தால் ஆயுள்காலம் கண்டிப்பாக
குறைந்துவிடும். சில நேரங்களில் கணினியில் ஒன்றுக்கு மேலான
அப்ளிகேஷன்களில் பனியாற்றிக்கொண்டிருக்கும் போது தீடிரென கரன்ட் இல்லாமல்
கட் ஆகிவிடும். அப்போது கணினியில் நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். மேலும்
Hard disk ஆனது சில நேரங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஊதா நிற விண்டோ
தோன்றி வன்தட்டானது சரியாக இல்லை அதை மாற்றம் செய்ய சொல்லும்.
இதுபோன்ற பிரச்சைகள் வரும் முன்னரே நம் கணினியில் Hard disk இல் என்ன நிலையில்
உள்ளது என்பதை நம்முடைய இயங்குதளத்தின் உதவியுடன் அறிந்துகொள்ள முடியும்.
இதற்கு முதலில் வின்கீ+R கீகளை ஒருசேர அழுத்தவும். அப்போது Run சாளரப்பெட்டி திறக்கும். அதில் cmd என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அடுத்து commend prompt ஒப்பன் ஆகும் அதில் wmic என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து diskdrive get status என்று தட்டச்சு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.
உங்கள் Hard disk நன்றாக இருந்தால் OK என்ற செய்தி வரும். மிகவும் நன்றாக இருப்பின் OK OK என்று வரும். அதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். கணினியினுடைய Hard disk நிலையை

No comments:
Post a Comment