இலங்கை அரசிற்கு தற்போது தலையிடியைக்
கொடுக்கத் தொடங்கியுள்ள ஒரு பிரச்சனையாக இந்த ஹக்கேர்ஸ்களின் தாக்குதல்கள்
நடந்தேறியிருக்கின்றன. பொதுவாக ஏனைய பல உலக நாடுகளும் இத்தகைய
தாக்குதல்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில்
அண்மையில் நடந்த அடுத்தடுத்த இரு தாக்குதல்களால் சற்றே
தடுமாறிப்போயுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில்
இத்தகைய ஹக்கேர்ஸ்களின் தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர்
அதாவது யுத்த நிலைமைகள் தீவிரம் அடைந்த காலப்பகுதியில் இலங்கை
ராணுவத்திற்கு சொந்தமான இணையத்தளங்கள் மீதும்(Defence.lk, Navy.lk, Army.lk) இலங்கையின் தொலைபேசி சேவை வழங்குநர்களின்(Dialog, Mobitel, Suntel, Sri lanka Telecom)
சேர்வர்கள்(server) மீதும் உலகளவில் இயங்கும் அனோனிமஸ்(Anonymous)
குழுமங்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் பலவகையான தகவல்களும்
கையகப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு நின்றுவிடாமல் குறிப்பிட்ட அந்த
தளங்களில் பயனாளர்களாக இருந்தோரின் அந்தரங்க தகவல்கள் பலவும்
பகிரங்கப்படுத்தப்பட்டன. மேலும் 2009 ஆம் ஆண்டு மே மாதமளவில் இலங்கையின்
சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின்(Katunayake
International Airport) கணினி வலையமைப்பு(Computer Network) இனந்தெரியாத
ஹக்கேர்ஸ் குழுமம் ஒன்றினால் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக முடக்கி
வைக்கப்பட்டமையும் இதையொத்த செயற்பாடுகளில் ஒன்றே.
இப்படியாக இலங்கை அரச மற்றும் அது
தொடர்புடைய நிறுவனங்களின் இணையத்தளங்களை தாக்கும் செயற்பாடுகளின் ஒரங்கமாக
அண்மையில் அதாவது ஒரு சில வாரங்களிற்கு முன்பு இலங்கை அரசின் மாகாண
அமைச்சுகளிற்கு சொந்தமான சுமார் 20இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள்
பங்களாதேஸைச் சேர்ந்த ஹக்கேர்ஸ் குழுமம் ஒன்றினால் ஹக் செய்யப்பட்ட
செயற்பாட்டை காணமுடிந்தது.
வெளியில் தங்களை பெரிதாக அறிமுகப்படுத்தாத
அந்த பங்களாதேஸ் ஹக்கேர்ஸ் குழுமம், இலங்கை அரசு தனக்கு சொந்தமான
இணையத்தளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து கொடுத்த அதிகப்படியான
வியாக்கியானத்தை பொய்பிப்பதற்கே தாங்கள் அந்த இணையத்தளங்களை ஹக் பண்ணியதாக
பின்னர் அறிவித்தது.
அந்த வரிசையில் தற்பொழுது ”இலங்கை தேசிய
பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தின் (The Media Centre for National
Security)” உத்தியோக பூர்வமான இணையத்தளமான nationalsecurity.lk தளம் முற்றாக தாக்கியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் ”Game Over”
என்ற அனோனிமஸ் ஹக்கேர்ஸ் குழுமம் ஒன்றினால் நடாத்தப்பட்டிருக்கிறது.
இத்தாக்குதலுக்கான Submission Date - 2013-01-16, Attack Date - 2013-01-10
என அந்த அனோனிமஸ் குழுமம் முதலிலேயே திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
இடையிலும் ஒருதடவை தங்கள் Twitter பக்கத்தில் (https://twitter.com/ThisIsGame0ver) ஒரு இதுவாக இருக்கட்டுமென்றெண்ணி இந்த தாக்குதல் பற்றி அறிவித்திருந்தார்கள்.
ஆனால் ஓராயிரம் பிளஸ் பின்தொடர்பாளர்களை
மட்டுமே கொண்ட இவர்களுடைய பக்கத்தில் இதனை எவரும் பெரிதாக
கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் சத்தம் போடாமல் இவர்கள் செய்த தாக்குதலின்
வீரியம் இறுதிநேரத்தில் தான் இலங்கை அதிகாரிகளிகு தெரிய வந்திருக்கிறது.
என்செய்ய அந்த நேரம் நிலைமை கைமீறிப்போய்விட்டிருந்தது.
பொதுவாக இணையத்தளங்கள் மீதான
தாக்குதல்களுக்கு ஹக்கேர்ஸ் SQLi Attack, Brute force
Attack, XSS Attack…… என பலவகையான தாக்குதல் வழிமுறைகளை கையாளுகிறார்கள்.
ஆக குறிபிட்ட இந்த nationalsecurity.lk இணையத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர்கள் SQL injection தாக்குதல் வழிமுறையை பயன்படுத்திருக்கிறார்கள் என தெரிய தற்போது வந்துள்ளது.
குறிப்பாக ஒரு இணையத்தளம் PHP இல் MYSQL
databaseஇனைக் கொண்டே இயங்குகின்றதென தெரிய வரும் போது அத்தகைய
இணையத்தளங்கள் மீது இத்தகைய SQL Injection தாக்குதல் முறை சாத்தியமாகிறது.
இப்படியாக வெற்றிகரமாக nationalsecurity.lk தளம் மீது தாக்குதல் நடத்திய
ஹக்கேர்ஸ் அந்த இணையத்தளத்தின் பயனாளர்களின் பயனர் பெயர்கள்(user name)
plain-text வடிவத்திலான கடவுச்சொற்கள்(password) போன்றவற்றையும்
கையகப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள் அந்த விபரங்களை இந்த சுட்டியில்
சென்று பாருங்கள். http://218.62.32.76/releases/nationalsecurity.txt
இந்த இணையத்தளம் நேரடியாக இலங்கையின்
பாதுகாப்பு செயலாளரின் மேற்பார்வையின் கீழ் இயங்கிய ஒன்று.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இது ஒரு பெரிய இழப்பு ஏனெனில் இதில்
சேமித்து வைக்கப்பட்டிருந்த தேசிய பாதுகாப்பு ரகசியங்கள் பலவும்
ஹக்கேர்ஸ்ஸால் களவாடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக ”Game Over” ஹக்கேர்ஸ்
குழுமத்தினால் முற்றாக தாக்கியளிக்கப்பட்ட இந்த இணையத்தளம் தற்சமயம்
”We are currently performing site maintenance. we’ll be back 100% in a
bit.” என்ற மாதிரியான அறிவிப்பை தெரிவித்தபடி உள்ளது..


No comments:
Post a Comment