Wednesday, May 29, 2013

Facebook comment எழுதும் வைரஸ்




சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது.

இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது.



இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. 



மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது.

தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

Read more »

Wednesday, May 8, 2013

உங்கள் கூகுல் குறோமி பாவனையால் மிகப்பெரிய ஆபத்து..!


அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தும் "browser" இதில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.
இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம்.
அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத் தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றோம்.
நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்
அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச் சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா?
நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்து விட்டு சென்று விடுவீர்கள்.
ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது
நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்கலாம், அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்கலாம்.
இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம். அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்து விடுவார்கள்.

இனிமேல் உங்களிட்கு அந்தப் பிரச்சினை இல்லை. நாம் சொல்வது போல் செய்தால் போதும்.
எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் "setting option" என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதில் "basic" என்பதற்கு கீழ் இருக்கும் "personal setuff" என்பதை கிளிக் செய்து "password" என்பதை தெரிவு செய்து "neversave" passwords என்பதில் டிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் "history" கிளிக் செய்து "clear all browsing data" என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது

    
Read more »