ஸ்கைப் (Skype) பற்றி அதிகமானவர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களால் அதிகம் பயன்படுத்தும் ஸ்கைப்பில் அடிக்கடி மால்வேர் பரவும். தற்போதும் புதுவகையான மால்வேர் பரவிவருகிறது.
இந்த மால்வேர் பற்றி பார்ப்பதற்கு முன், Bitcoin பற்றி தெரிந்துக் கொள்வோம்.
Bitcoin என்றால் என்ன?
Bitcoin என்பது Virtual நாணயம் ஆகும். இது 2009-ஆம் ஆண்டு Satoshi Nakamoto என்ற தனி நபரால் அல்லது ஒரு குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது திறந்த மூலம் (Open Source) ஆகும். இந்த நாணயங்கள் கணினி-மொபைல்கள் மூலம் பரிமாறப்படுகிறது. இதற்கென்று எந்த ஒழுங்குமுறைகளும் கிடையாது.
கடந்த ஜனவரி மாதம் 13.50 அமெரிக்க டாலராக இருந்த ஒரு BitCoin மதிப்பு தற்போது 140 டாலராக உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் BitCoin நாணயத்தை அங்கீகரித்துள்ளன. இந்த நாணயங்கள் மூலம் நீங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம்.
பிட்காயின்களைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று விலைக் கொடுத்து வாங்கலாம், இரண்டாவது Bitcoin Miner மென்பொருள்கள் மூலம் நீங்களே உருவாக்கலாம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபற்றி விரிவாக என்னால் சொல்ல இயலாது.
ஸ்கைப் மால்வேர்:
பொதுவாக மால்வேர் பரப்புபவர்கள் வித்தியாசமான செய்திகளுடன் சுட்டியை இணைத்து அனுப்புவார்கள்.
- Hey some person is making terrible rumors about you... tinyurl.com/83zexxf
- This video with you in it had me dying lol t.co/xxxxx
- when did you make this video? its hilarious, cant stop laughing lol bit.ly/xxxx
இந்த மென்பொருள் இயங்குவதால் உங்கள் கணினி வேகம் குறைந்துவிடும், சில சமயம் உங்கள் கணினி இயங்காமலேயே போக வாய்ப்புண்டு.
இந்த மால்வேர் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள:Skypemageddon by bitcoining
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்....! எந்தவொரு வித்தியாசமான சுட்டியையும் க்ளிக் செய்வதற்கு முன் பல தடவை யோசித்து செயல்படுங்கள்



No comments:
Post a Comment