Tuesday, July 10, 2012

விண்டோஸ் இல் ஏற்படும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய







விண்டோஸ் 7ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இன்று பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம் இல்லையா? அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்திப் பழகிவிட்டதால் மற்ற புதிய இயங்குதளங்களுக்கு மாறுவதற்கும் தயக்கம் வருவது சகஜம்தான்.. இல்லையா?


நீங்கள் விண்டோஸ் xp ஓர் விண்டோஸ் 7 பயன்படுத்துபவரா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய பயன்படும் ஒரு அற்புதமான மென்பொருளைப் பற்றி இப்பதிவில் காண்போம். ஒரு வரி விடாமல் படித்துப் பயன்படுத்திப்பாருங்கள்.. இந்த மென்பொருளின் மகத்துவம் உங்களுக்குப் புரியும்.

உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் நடைபெற்றுவிட்டவுடன் என்ன நடக்கும் தெரியுமா?

கணினியில் டாஸ்க்மேனேஜர்(Task Manager), ரெஜிஸ்டரி எடிட்டர்(Registry Editor), ரன் டயலாக் பாக்ஸ் (Run Dialogue box)போன்றவற்றை வைரசானது செயலிழக்க வைத்துவிடும். அதாவது Disable செய்துவிடும். இதனால்தான் உங்கள் கணினி முடங்கிவிடும். அல்லது ஒரு சில பிரச்னைகளைக்கு வழி வகுத்துவிடும்.

இப்படி வைரஸ் தாக்கத்தால் உங்கள் கணினி பாதிக்கப்படும் போது மேற்சொன்ன Task manager, registry editor ஆகியவற்றை திறக்கும்போது அவற்றில் பிழைச் செய்தி (Error message)மட்டுமே காட்டும். இந்த எர்ரர் மெசேஜ் அநேகமாக இப்படி இருக்கும்.
"Task Manager has been disabled by your administrator".. ஆனால் நாமாக இதை டிசேபிள் செய்திருக்க மாட்டோம்...

இதுபோன்று சின்ன சின்னப் பிரச்னைகள் கணினியில் தோன்றும்போது அவை வைரஸின் கைங்கர்யமாகத்தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.. இப்பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது இம்மென்பொருள். மென்பொருளின் பெயர்: XP Quick Fix

இந்த எளிய மென்பொருள் மூலம் உங்கள் விண்டோஸ் xp யில் ஏற்படும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.

Enable Command Prompt
Enable Folder Options
Enable Recovery Console
Enable Registry Editor
Enable Task Manager
Error when trying to access Add or Remove/ Program and Features program
Fix CD autoplay
Fix CD/DVD drive is missing or not recognized
Fix delay in opening Explorer
Fix error 1606 couldn’t access network location
Fix right-click error
Fix slow hotkeys
Fix slow network file/shared/remote
Remove OEM splash and wallpaper
Restore "Send To" context menu item
Restore Device Manager
Restore grayed Explorer and Taskbar toolbars
Restore grayed file associations
Restore missing Run dialog box
Restore My Computer (Computer) properties
Restore My Documents properties
Restore My Network Places to Desktop
Restore Network icon to system tray
Restore the native ZIP file integration
Stop My Documents open at startup

ஆகிய பிரச்னைகளுக்கு இச்சிறிய Software தீர்வு காண்கிறது.. Software  தரவிறக்கி.. உங்கள் கணினியில் மேற்க்கண்ட பிரச்னைகள் ஏதேனும் இருப்பின் அவற்றிக்குரிய பட்டனை அழுத்தி பிரச்னைக்கு நீங்கள் எளிதாக தீர்வு காண முடியும். இப்பயனுள்ள மென்பொருளைDownload பண்ண கீழ்க்கண்ட link http://www.mediafire.com/?b5qk4xx8uxugw3f
Read more »

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்



1. மானிட்டரின் LED Light விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும்.

ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.

17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். 
 
அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்
 
 எந்த கேள்விகள் கேட்க skype:   naleefbcas or naleefcarrefour@gmail.com

Read more »

Thursday, July 5, 2012

கீபோர்ட், மவுஸ் என்பவற்றிற்​கு கடவுச்சொல் கொடுப்பதற்​கு



கணணியில் உள்ள தரவுகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பதைப் போன்று, கணணியின் மவுஸ், கீபோர்ட் என்பவற்றை கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பதற்கு KeySearch எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.890 KB சிறிய அளவுடைய இம்மென்பொருள் மூலம் இணையத்தளத்தில் தேடுதலை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் சார்ட் கட் கீ போன்றவற்றின் உதவியுடன் செயற்படுத்த முடியும்.
அதாவது Crtl + Alt + P ஆகிய கீக்களை அழுத்துவதன் மூலம் கீபோர்ட், மவுஸ் ஆகியவற்றின் செயற்பாட்டை நிறுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் இச் சார்ட் கட் கீக்களை விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் Google, Bing, Yahoo, Ask போன்ற தேடு இயந்திரங்களையும் சார்ட் கட் கீ மூலம் ஓப்பன் செய்யக் கூடியவாறு மாற்றியமைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.softpedia.com/get/Desktop-Enhancements/KeySearch.shtml
Read more »

Monday, June 11, 2012

இணையத்தில் பாதுகாப்பாக பிரவுசிங் செய்ய Private Browsing...

இணையத்தில் உலவும்போது பாதுகாப்பில்லை எனில் அவ்வளவுதான். எளிதாக நமது தகவல்களைத் hack செய்து  மற்றவர்கள் தவறாக பயன்படுத்த முயற்சிக்க கூடும்.

உங்களுடைய சொந்தக் கணினி அல்லாது, மற்றவர்கள் கணினி அல்லது இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் நீங்கள் Browsing செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இதற்குத்தான் முன்னணி பிரௌசர்களாக Internet Explorer, Google Chrome, FireFox போன்ற வலைஉலவிகளில் ஓர் அற்புதமான வசதியைக் கொடுத்திருக்கின்றனர்.
இந்த வசதியின் பெயர்தான் Private Browsing

இந்த வசதியைப் பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது உங்களுடைய தகவல்கள், உலவியிலோ அல்லது உங்கள் கணினியிலோ சேமிக்கப்படாது.இதனால் மற்றவர்கள் உங்கள் தகவல்களை எளிதாக திருடி எடுத்துப் பயன்படுத்த முடியாது.

இந்த வசதியை ஒவ்வொரு வலைஉலவியிலும் பெறுவது எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் IE (Internet Explorer) உபயோகிப்பாளரென்றால்..

உங்கள் பிரௌசரின் Tools மெனுவில் சென்று In Private Browsing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ctrl+Shift+P என்பதை சொடுக்கிச் செல்லவும்.

அவ்வாறு செல்லும்போது உங்களுடைய பிரௌசரின் விண்டோ இவ்வாறு மாறிவிடும். இனி நீங்கள் வழக்கம்போல் வலையில் பாதுகாப்பாக உலவலாம்.
Private Browsing in IE

நீங்கள் Mozila Firefox-உபயோகிப்பாளரென்றால்..

உங்கள் Firefox Browser-ல் Tools மெனுவில் Private Browsing என்பதை கிளிக் செய்யுங்கள். அல்லது Ctrl+shift+P என்பதைச் சொடுக்குங்கள்.

Private Browsing in Firefox

பிறகு தோன்றும் விண்டோவில் பாதுகாப்பாக உலவுங்கள்..

நீங்கள் Google Chrome உபயோகிப்பாளரென்றால்..
வலது மேல்மூளையில் Spanner போன்ற Settings பட்டனைக் கிளிக் செய்து அதில்
New incognito window என்பதை கிளிக் செய்து பயன்படுத்தலாம். அல்லது இதற்கான Short cut key யான Ctrl+Shift+N என்பதை அழுத்தியும் பயன்படுத்தலாம். 
Private Browsing in Google chrome
Read more »

Thursday, June 7, 2012

cisco packet tracer



PACKET TRACER என்னும் SOFTWARE cisco என்னும் multinational company-ஆல் வழங்கபடுகிறது .இம் மென்பொருளின் முக்கியத்துவத்தை குறித்து computer networking துறையில் உள்ள வல்லுனர்களும் அறிவார்கள்..computer networking பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் முக்கியமான மென்பொருள்..இதில் real time-இல் ஒரு computer network-ஐ உருவாக்குவதற்கு முன்பாக இந்த மென்பொருளில் design செய்து அது எவ்வாறு செயல்படுகிறது என்று preview பார்க்கலாம்..மேலும் computer networking –இல் உள்ள ஒவ்வொரு devices –ம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்..computer networking பயிலும் மாணவர்கள் ஒன்றிக்கு மேற்பட்ட கணினிகளை இணைத்து அது எவ்வாறு செயல்படுகிறது என்று செயல் முறை விளக்கம் பார்ப்பது கடினம் மற்றும் இது அதிக பொருட்செலவும் ஆகும்..இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த மென்பொருள் பயன்படுகிறது..ஒரு மிகபெரிய அளவிலான network-ஐ இதில் design செய்து அவற்றின் செயல்முறையையும் இதில் காண முடியும்..

இணையத்தில் இது போன்று எண்ணற்ற மென்பொருட்கள் உள்ளன ஆனாலும் அவை எல்லாவற்றை காட்டிலும் packet tracer தனி சிறப்பு வாய்ந்தது..காரணம் அதில் real time and simulation என்று இரண்டு modes-உள்ளன..இதில் simulation mode-இல் packets எப்படி send/receive ஆகிறது என்பதை நாம் காண முடியும்..மேலும் பயன்படுத்துவதற்கு மற்ற அனைத்து மென்பொருட்களை விட இது தான் user friendly ஆக உள்ளது.http://www.ebook4all.org/packet-tracer-version-5-3-1-software-downloads/
Read more »

Saturday, May 26, 2012

ஜூலை மாதம் இணையத்தளங்களுக்கு பாதிப்பு: FBI எச்சரிக்கை



எதிர்வரும் ஜூலை மாதம் உலக அளவில் குறைந்தது 3 லட்சம் பேர் இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை(FBI) எச்சரித்துள்ளது.
தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org  என்ற முகவரியில் ஓர் இணையத்தளத்தினை அமைத்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று உங்களது கணணி மால்வேர் வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம்.
டி.என்.எஸ் சேஞ்சர்(DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டொலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்த கணணி மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ் நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும்.
அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு மேலும் சில லிங்க்குகள் தரப்படும்.
இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டொலர் என எப்.பி.ஐ மதிப்பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ இதற்கென அமைத்த இணையத்தளம் தருகிறது. அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள்.
ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணையத்தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார்.
Read more »

Thursday, May 24, 2012

Knowledge Graph: கூகுள் தேடலின் அடுத்த தலைமுறைக்கான புத்தம் புதிய வசதி



கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான். தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது கூகுள்.
பொதுவாக தேடல் பொறிகளில் நாம் ஏதாவது வார்த்தைகளை தேடினால் அந்த வார்த்தைகளை குறியீடுகளாக(Keywords) எடுத்துக் கொண்டு அது தொடர்பான இணையப் பக்கங்களை நமக்கு காட்டும். இந்த முறையினை தான் கூகுளும் பின்பற்றி வந்தது.
தற்போது Knowledge Graph என்ற பெயரில் தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களை தேடல் முடிவு பக்கத்தில் பக்கப்பட்டியில்(Sidebar) காட்டப் போகிறது.
உதாரணத்திற்கு Srilanka என்று தேடினால் உமது வலது  பக்கட்டில்  காட்டும். இனி இவற்றுடன் சேர்த்து பக்கப்பட்டியலில்(Sidebar)Srilanka பற்றிய தகவல்களையும், அது தொடர்பான வேறு தேடல்களையும் காட்டும்.
மேலும் Google Knowledge Graph மூலம் பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள்(Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி உடனடித் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நமது Time மிச்சமாகும்.
கூகுளின் அறிவு வரைபடத்தில்(Knowledge Graph) இதுவரை 500 மில்லியன் பொருட்களும்(Objects) 3.5 மில்லியன் தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.
முதலில் அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதியை தந்த கூகுள் இப்போது அனைவரும் பயன்படுத்துமாறு செய்துள்ளது.

Read more »