Saturday, May 26, 2012

ஜூலை மாதம் இணையத்தளங்களுக்கு பாதிப்பு: FBI எச்சரிக்கை



எதிர்வரும் ஜூலை மாதம் உலக அளவில் குறைந்தது 3 லட்சம் பேர் இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை(FBI) எச்சரித்துள்ளது.
தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org  என்ற முகவரியில் ஓர் இணையத்தளத்தினை அமைத்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று உங்களது கணணி மால்வேர் வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம்.
டி.என்.எஸ் சேஞ்சர்(DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டொலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்த கணணி மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ் நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும்.
அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு மேலும் சில லிங்க்குகள் தரப்படும்.
இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டொலர் என எப்.பி.ஐ மதிப்பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ இதற்கென அமைத்த இணையத்தளம் தருகிறது. அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள்.
ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணையத்தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார்.
Read more »

Thursday, May 24, 2012

Knowledge Graph: கூகுள் தேடலின் அடுத்த தலைமுறைக்கான புத்தம் புதிய வசதி



கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான். தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது கூகுள்.
பொதுவாக தேடல் பொறிகளில் நாம் ஏதாவது வார்த்தைகளை தேடினால் அந்த வார்த்தைகளை குறியீடுகளாக(Keywords) எடுத்துக் கொண்டு அது தொடர்பான இணையப் பக்கங்களை நமக்கு காட்டும். இந்த முறையினை தான் கூகுளும் பின்பற்றி வந்தது.
தற்போது Knowledge Graph என்ற பெயரில் தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களை தேடல் முடிவு பக்கத்தில் பக்கப்பட்டியில்(Sidebar) காட்டப் போகிறது.
உதாரணத்திற்கு Srilanka என்று தேடினால் உமது வலது  பக்கட்டில்  காட்டும். இனி இவற்றுடன் சேர்த்து பக்கப்பட்டியலில்(Sidebar)Srilanka பற்றிய தகவல்களையும், அது தொடர்பான வேறு தேடல்களையும் காட்டும்.
மேலும் Google Knowledge Graph மூலம் பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள்(Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி உடனடித் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நமது Time மிச்சமாகும்.
கூகுளின் அறிவு வரைபடத்தில்(Knowledge Graph) இதுவரை 500 மில்லியன் பொருட்களும்(Objects) 3.5 மில்லியன் தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.
முதலில் அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதியை தந்த கூகுள் இப்போது அனைவரும் பயன்படுத்துமாறு செய்துள்ளது.

Read more »

Tuesday, May 22, 2012

இனையத்தில் பாதுகாப்பாக உலாவ ஒரு Plug in




நாம் தினமும் 10 முதல் 50 தளங்களையாவது பார்வையிடுகிரோம்.  அவைகளில் சில பாதுகாப்பான தளங்களைப் போல் காட்சியளித்தாலும்.  முழுமையாக நம்பமுடியாததாக இருக்கலாம்.  அவற்றை
பரிசோதித்து தளம் பாதுகாப்பானதான என நமக்கு

நமக்கு சொல்கிறது இந்த WOT Plug in இதை உங்கள் உலாவியில் Install செய்துக் கொள்ளுங்கள்.
 

நீங்களும் நீங்கள் செல்லும் தளம் பாதுகாப்பானதா இல்லையா என ஒட்டளிக்கலாம்.



                      
                                                                           
 நாம் இதை Install செய்துவிட்டால் போதும்.  நாம் எந்த தளத்திற்க்குச் சென்றாலும் அது பாதுகாப்பானதா இல்லையா என உடனே சொல்லிவிடுகிறது.  இதனால் நாம் வைரஸ் உள்ள தளங்களை சுலபமாக கண்டறிந்து ஒதுக்கிவிடலாம்.


நாம் கூகுளில் பதிவுகளை தேடும் போதும் இது செயல்படுகிறது. இதனால் தளம் பாதுகாப்பானதா இல்லையா என்று நாம் தளத்தின் உள்ளே நுழையாமலே தெரிந்து கொண்டு தவிர்த்து விடலாம்.  இதனால் வைரஸ்களின் பிடியில் மாட்டாமல் தப்பித்துக் கொள்ளலாம்
Read more »

சமூக வலைத்தளத்தை தொடங்கியது மைக்ரோசாப்ட்

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பு, So.Cl என்ற முகவரியில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனியார் பீட்டாக செயற்பட்டு வந்தது.
இது தற்போது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வுகள், சமூக தேடல்கள் உள்ளிட்ட வசதிகளை பெருக்குவதற்காக இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

புதிதாக கணணி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும்.
அவ்வாறான நேரத்தில் நாம் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. Processor: இது தான் உங்கள் கணணியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விடயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு(மே 2012), நீங்கள் வாங்கும் கணணியில் Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium(1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7.
அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணணியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்.
2. RAM: உங்கள் கணணியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே.
எனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணணி இயங்கும்.
தற்போதைய நிலையில்(மே 2012) 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணணிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம்.
அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம். Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணணி வாங்குதல் நலம்.
அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.
மேலும் புதிதாக கணணி வாங்கும் போது Processor மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். Core 2 Duo என்றால் 4GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும்.
மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம்.
3. Hard Disk or HDD: உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB HDD வாங்கவும்.. தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்.
4. DVD R/W Drive DVD Drive: உங்கள் கணணியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 23-pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள்.
5 . Mouse/Kayboard: உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம்.
6. Graphics Card: இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம்.
7. Monitor: கணணி என்றால் 17 Inch என்பதை மிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணணி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.
8. Pen Drive: பல ஆயிரம் போட்டு கணணி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும்.
Read more »